நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏற்காடு, ஏற்காட்டில் நேற்று காலை முதல் வெயில் தாக்கம் அதிகம் இருந்தது. மாலை, 6:35 மணிக்கு பனிமூட்டம் சூழ்ந்தது. இதனால் அருகே செல்லும் வாகனங்கள் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து பலத்த காற்று,
இடி, மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கி, ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து சாரல் மழையாக பெய்தது. இதில் மலை கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு, இரவு, 7:50 மணி வரை மக்கள் அவதிப்பட்டனர். பின் மழை நிற்க மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.