நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின், சேலம் மாவட்ட மையம் சார்பில், கோட்டை மைதானத்தில் நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று சட்டத்தை ரத்து செய்தல்; தமிழக அரசு ஊதியக்குழு அமைத்து, ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம் உயர்த்தி வழங்கு
தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட செயலர் ராஜ்குமார், ஓய்வு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலர் சுரேஷ் உள்பட பலர் பங்கேற்றனர்.