ADDED : ஜூலை 31, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார் அருகே வடசென்னிமலை அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லுாரியில், 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அங்கு நாட்டு நலப்பணித்திட்டம் சார்பில், மனித உரிமைகள் மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் விக்டோரியா தங்கம் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி ரவிச்சந்திரன், ஆத்துார் துணை நீதிபதி கணேசன், மனித உரிமைகள் மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டில் ஏற்படும் தீமைகள், சட்ட ரீதியான விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். பேராசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.