ADDED : ஜூலை 22, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
சேலம்:சி.ஐ.டி.யு.,
சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில், சேலம்
கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர்
தியாகராஜன் தலைமை வகித்தார்.
உள்ளாட்சி அமைப்புகளில், 5
ஆண்டுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்களை பணி
நிரந்தரப்படுத்தல்; பணிக்காலத்தில் இறந்த தொழிலாளியின்
குடும்பத்துக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலையை தாமதமின்றி
வழங்குதல்; ஊழியர் ஊதியத்தில் பிடித்தம் செய்யும், பி.எப்., - இ.எஸ்.ஐ.,
கணக்கு காட்டுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
