/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று 10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்
/
இன்று 10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்
ADDED : மார் 28, 2025 01:18 AM
இன்று 10ம் வகுப்பு தேர்வு தொடக்கம்
சேலம்:தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி வரும் ஏப்., 15 வரை நடக்கிறது. இதற்காக சேலம் மாவட்டத்தில் உள்ள மையங்களில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, சி.இ.ஓ., கபீர் கூறியதாவது:சேலம் மாவட்டத்தில், 20,591 மாணவர், 20,807 மாணவியர் என, 41,398 பேர், பொதுத்தேர்வு எழுதும் நிலையில், 183 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 913 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. தனித்தேர்வராக, 1,465 பேர் உள்ளனர்.
தேர்வு பணியில் தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களில், 190 முதன்மை கண்காணிப்பாளர், 190 துறை அலுவலர், 230 பறக்கும் படை அலுவலர், 3,500க்கும் மேற்பட்ட அறை கண்காணிப்பாளர் என, 4,100 ஆசிரியர், ஆசிரியரல்லா பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வறைக்குள் மாணவர்கள் காலை, 9:45 மணிக்கு அனுமதிக்கப்பட்டு, வினாத்தாள், விடைத்தாள் வினியோகிக்கப்பட்டு, 10:15 மணிக்கு தேர்வு எழுத தொடங்குவர். மதியம், 1:15 மணிக்கு தேர்வு முடியும். மார்ச், 28ல்(இன்று) தமிழ், ஏப்., 2ல் ஆங்கிலம், 4ல் ஆப்ஷனல் மொழித்தேர்வு, 7ல் கணிதம், 11ல் அறிவியல், 15ல் சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.பிளஸ் 1 பொதுத்தேர்வு நேற்றுடன் முடிந்தது. கடைசி தேர்வாக கணக்குப்பதிவியல், வேதியியல் உள்ளிட்ட தேர்வுகள் நடந்தன.