/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வேன் கவிழ்ந்ததில் ௧௦ பேர் படுகாயம்
/
வேன் கவிழ்ந்ததில் ௧௦ பேர் படுகாயம்
ADDED : ஏப் 23, 2024 03:48 AM
ஆத்துார்: பெத்தநாயக்கன்பாளையம் அருகே, தும்பல் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 37. இவர் நேற்று கல்வராயன்மலை, கருமந்துறை பகுதியில் அறுவடை செய்த கரும்புகளை, மினி சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு வாழப்பாடி நோக்கி சென்றுள்ளார்.
நேற்று இரவு, 9:00 மணியளவில் கல்வராயன்மலை முதல் கொண்டை ஊசி வளைவு பகுதிக்கு வந்தபோது, மினி சரக்கு வேனின் பிரேக் பழுதானதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை நடுவில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் ராஜா, மினி சரக்கு வேன் அடிப்பகுதியில் சிக்கிக் கொண்டார். அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டனர்.
மினி சரக்கு வேனில் வந்த ௯ பேர் மற்றும் டிரைவர் படுகாயமடைந்தனர். இவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஏத்தாப்பூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

