/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
100 சதவீதம் ஓட்டுப்போட கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு
/
100 சதவீதம் ஓட்டுப்போட கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு
100 சதவீதம் ஓட்டுப்போட கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு
100 சதவீதம் ஓட்டுப்போட கலைநிகழ்ச்சியில் விழிப்புணர்வு
ADDED : மார் 22, 2024 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்;சேலம், கருங்கல்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில், களஞ்சியம் கலைக்குழுவின், வாக்காளர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதை தொடங்கி வைத்து, மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்போட வேண்டும் என்ற நோக்கில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. கலை நிகழ்ச்சிகள், கல்லுாரிகளில் உறுதிமொழி கையொப்பமிடும் நிகழ்ச்சிகள், துண்டு பிரசுரங்கள், 'செல்பி பாயின்ட்' உள்ளிட்டவைகளால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.