/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
11 பவுன் நகை மீட்பு வழிப்பறி வாலிபர் கைது
/
11 பவுன் நகை மீட்பு வழிப்பறி வாலிபர் கைது
ADDED : ஜூன் 19, 2024 01:57 AM
சேலம், சேலம் அன்னதானப்பட்டி, கந்தப்பகாலனி அடுத்த புதிய கணபதி நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 45, லாரி பட்டறை அதிபர். இவரது மனைவி மகேஸ்வரி, 40. இவர் கடந்த, 13, பிற்பகல், 3:30 மணியளவில் வீட்டுக்கு அருகே நடந்து சென்றார். அப்போது ஆக்ஸிஸ் பைக்கில் வந்த நபர், மகேஸ்வரியை வழிமறித்து, அவரது கழுத்தில் இருந்த எட்டே முக்கால் பவுன் தாலிக்கொடியை பறித்து கொண்டு தப்பினார்.
அன்னதானப்பட்டி போலீசார் அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவை ஆய்வு செய்து அம்மாபேட்டை சேர்மன் ராமலிங்கம் தெருவை சேர்ந்த பத்மநாபன், 42, என்ற திருமலையை கைது செய்தனர். விசாரணையில் மகேஸ்வரியின் தாலிக்கொடி, பள்ளப்பட்டியில் ஒன்றரை பவுன் செயினை வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டார். அவரது வாக்குமூலத்தின்படி, வழிப்பறி செய்த 11 பவுன், 2 கிராம் நகையை மீட்டனர்.