/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ராஜகணபதி கோவிலில் 12 நாள் விநாயகர் சதுர்த்தி விழா
/
ராஜகணபதி கோவிலில் 12 நாள் விநாயகர் சதுர்த்தி விழா
ADDED : செப் 03, 2024 03:11 AM
சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில், 12 நாட்கள் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற உள்ளது.
சேலம் டவுன், கடைவீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வரும், 7ல் தொடங்கி, 18 வரை என, 12 நாட்கள் நடைபெற உள்ளது. 7 காலை, 4:00 முதல் 6:00 மணி வரை கணபதி ஹோமம், மாலை, 4:00 மணிக்கு தங்க கவசம் சாத்துப்படி, 8 காலை, 10:00 முதல் 12:00 மணிக்குள் அபி-ஷேகம், அலங்காரம், ஆராதனை, மாலை, 4:00 மணிக்கு வல்லப கணபதி சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. 9 மாலை, 4:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மூலவர் சுவாமிக்கு குமாரகண-பதி அலங்காரம், இரவு, 7:00 மணிக்கு சுவாமி புறப்பாடு.வரும், 10 முதல் 15 வரை சுவாமிக்கு காலை, 10:00 முதல், 12:00 மணிக்குள் அபிஷேகம், அலங்காரம், மாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், இரவு, 7:00 மணிக்கு சுவாமி திருவீதி புறப்-பாடு நடைபெற உள்ளது. 16 இரவு, 10:00 மணிக்கு மின்விளக்கு அலங்காரத்தில் சத்தாபரணம், 17ல் இரவு புஷ்ப சத்தாபரணம், மலர் அலங்காரத்தில் சுவாமி திருவீதி புறப்பாடு நடக்க இருக்கி-றது. 18 காலை, 7:00 முதல், 10:00 மணிக்குள் மஞ்சள் நீராட்டு வசந்தம், காலை, 10:00 முதல், 12:00 மணி வரை உற்சவ ஆஸ்-தான பூஜை, 1,008 லிட்டர் பால் அபிஷேகம், புஷ்பாஞ்சலி மற்றும் அன்னதானம் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.