நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
13 பவுன் திருட்டு
சேலம்:சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த லட்சுமணன் மனைவி பாக்கியம், 61. இவர் கடந்த ஜன., 21ல் வீட்டை பூட்டிச்சென்றார். திரும்பி வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, 13 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. பாக்கியம் நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.