/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வயிற்றுப்போக்கால் 13 பேர் அனுமதி குடிநீரில் கழிவுநீர் கலப்பு?
/
வயிற்றுப்போக்கால் 13 பேர் அனுமதி குடிநீரில் கழிவுநீர் கலப்பு?
வயிற்றுப்போக்கால் 13 பேர் அனுமதி குடிநீரில் கழிவுநீர் கலப்பு?
வயிற்றுப்போக்கால் 13 பேர் அனுமதி குடிநீரில் கழிவுநீர் கலப்பு?
ADDED : ஏப் 06, 2024 01:41 AM
வாழப்பாடி:சேலம் மாவட்டம் வாழப்பாடி, முத்தம்பட்டி, சோமம்பட்டி, அத்தனுார்பட்டி, செக்கடிப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த, 8 பெண்கள், 5 ஆண்கள் நேற்றும், நேற்று முன்தினமும் வயிற்றுப்போக்கால், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் சேலம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்கள், 'குடிநீரில் துர்நாற்றம் வீசுவதோடு, கழிவுநீர் கலந்ததால் பெரும்பாலோருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது' என தெரிவித்தனர்.இதுகுறித்து வாழப்பாடி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், 'இரு நாட்களசாக வயிற்றுப்போக்கால் நோயாளிகள் அதிகம் வருகின்றனர். இதற்கு உணவு, தண்ணீர் பிரச்சனை காரணமாக இருக்கலாம். பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில், பிரச்னை என்னவென்று தெரியவரும்' என்றனர்.