/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரூர் அருகே பைனான்ஸ் அதிபர் வீட்டில் 16 பவுன் நகை, ரூ.25 லட்சம் கொள்ளை

ADDED : செப் 16, 2024 03:50 AM
கரூர்: கரூர் அருகே, நிதி நிறுவன அதிபர் வீட்டில், 16 பவுன் நகை, 25 லட்சம் ரூபாய் திருட்டு போனது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் மாவட்டம் வாங்கல், குப்புச்சிப்பாளையம், காவேரி நகரை சேர்ந்தவர் பவுன்ராஜ், 31; நிதி நிறுவன அதிபர். கரூர் அருகே செம்மடையில், நண்பர் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு, இவர் கடந்த, 13ம் தேதி இரவு சென்றார். மறுநாள் காலை பவுன்ராஜ் வீட்டுக்கு சென்றார். அப்போது பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் உடைக்கப்பட்டு, 16 பவுன் நகை, 25 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. பவுன்ராஜ் புகார்படி வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.