/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மின் இணைப்பில் திருட்டு ரூ.1.72 லட்சம் அபராதம்
/
மின் இணைப்பில் திருட்டு ரூ.1.72 லட்சம் அபராதம்
ADDED : செப் 05, 2024 03:07 AM
ஆத்துார்: தமிழக மின்வாரியம், சேலம் மின் திருட்டு தடுப்பு குழுவினர், ஆத்துார் அருகே புங்கவாடியில் நேற்று ஆய்வு செய்தனர்.
அப்போது விவசாயி நல்லுசாமி, 65, என்பவர், விவசாய மின் இணைப்பில், 3 எச்.பி.,க்கு கூடுதல் அளவில் மின்மோட்டார் பயன்படுத்தியது தெரிந்தது. இதனால், 78,737 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து அதே பகுதியில் வெங்கடாஜலம், 55, என்பவர், விவசாய மின் இணைப்பில் கூடுதல் மின்மோட்டார், வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது தெரிந்தது. அவருக்கு, 93,335 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரிய அலுவலர்கள் கூறுகையில், 'இரு விவசாயிகள் மின் திருட்டில் ஈடுபட்டதால், 1.72 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் குற்றவியல் நடவடிக்கையை தவிர்க்க முன்வந்ததால் அதற்கு, 3,000 ரூபாய் சமரச தொகை வசூலிக்கப்பட்டது. இது அபராதத்தில் அடங்கும்' என்றனர்.