/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டறை உரிமையாளருக்கு 'காப்பு' 1.8 கிலோ வெள்ளி மீட்பு
/
பட்டறை உரிமையாளருக்கு 'காப்பு' 1.8 கிலோ வெள்ளி மீட்பு
பட்டறை உரிமையாளருக்கு 'காப்பு' 1.8 கிலோ வெள்ளி மீட்பு
பட்டறை உரிமையாளருக்கு 'காப்பு' 1.8 கிலோ வெள்ளி மீட்பு
ADDED : மே 15, 2024 11:18 AM
சேலம்: சேலம், பொன்னம்மாபேட்டையை சேர்ந்தவர் பாபுலால், 55. இவரது மனைவி சரோஜா, 54. இவர்கள், வெள்ளி, ஜவுளி வியாபாரம், வட்டிக்கு பணம் கொடுத்தல் உள்ளிட்ட தொழில்களை செய்கின்றனர். கடந்த வாரம், இவர்கள் வீட்டில், 63 லட்சம் ரூபாய், 60 பவுன், 10 கிலோ வெள்ளி திருடுபோனது. இதுதொடர்பாக அம்மாபேட்டை போலீசார், வீட்டில் வேலை பார்த்த வள்ளி உள்பட, 7 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் திருடப்பட்ட வெள்ளி பொருட்களை உருக்கிய, கன்னங்குறிச்சியை சேர்ந்த வெள்ளி பட்டறை உரிமையாளர் செல்வம், 35, என்பவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.8 கிலோ வெள்ளியை மீட்டனர். இதன் மூலம் திருட்டு வழக்கில் கைது எண்ணிக்கை, 8 ஆக உயர்ந்தது.