/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
1,820 குவார்ட்டர் பாட்டில் பறிமுதல்
/
1,820 குவார்ட்டர் பாட்டில் பறிமுதல்
ADDED : ஏப் 19, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜலகண்டாபுரம்,:ஜலகண்டாபுரம்,
மலையம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் உரிமம்
எடுத்திருப்பவர் யுவராஜ், 40.
இவரது உறவினர், பாண்டியன்வளவை
சேர்ந்த சிவா, 32. இவர் வீட்டில் மதுபாட்டில்கள் இருப்பதாக, மத்திய
புலனாய்வு பிரிவு ஆய்வாளர் ஜெகநாதனுக்கு தகவல் கிடைத்தது. நேற்று
அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது, 1,820 குவார்ட்டர் பாட்டில்கள்
இருந்தன. உடனே பறிமுதல் செய்து, மேட்டூர் கலால்துறையினரிடம்
ஒப்படைத்தனர். மேலும் தேர்தல் ஓட்டுப்பதிவான இன்று விற்க
பதுக்கப்பட்டதா அல்லது கட்சியினருக்கு வழங்க
வைக்கப்பட்டிருந்ததா என, சிவாவிடம் விசாரணை நடக்கிறது.

