நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலத்தில் நேற்று முன்தினம், 'அக்னி நட்சத்திரம்' தொடங்கிய நிலையில், வெயில் அளவு, 105 டிகிரி பாரன்ஹீட்டாக குறைந்தது. மதியம் ஆங்காங்கே மேகக்கூட்டம் தென்பட்டது. மாலை, மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை, சில இடங்களில் சூறைக்காற்றுடன் மித மழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில், 54.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது.
இதில் அதிகபட்சம் மேட்டூரில், 19 மி.மீ., மழை பெய்துள்ளது. ஏற்காடு, 14.8, ஆணைடுமடுவு, 8, பெத்தநாயக்கன்பாளையம், 6, காடையாம்பட்டி, 4.8, கரியகோவில், 2, சேலம், 0.2 மி.மீ., பதிவாகி உள்ளது. எனினும் காலை முதல் வெயில் வழக்கம்போல் வாட்டி எடுத்தது. மாலையில் வெப்பம் தணிந்து காணப்பட்டது. நேற்றைய வெயில் அளவு, 41 டிகிரி செல்சியஸ். இது பாரன்ஹீட் அளவில், 105.8 டிகிரி.