/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் விழுந்த 2 பசுங்கன்று இறப்பு
/
கிணற்றில் விழுந்த 2 பசுங்கன்று இறப்பு
ADDED : மே 20, 2024 01:38 AM
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த வேப்பிலைப்பட்டியை சேர்ந்த விவசாயி ஜெகதீஷ், 40. இவரது பசுங்கன்று, நேற்று அதிகாலை, 6:00 மனிக்கு அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. வாழப்பாடி தீயணைப்பு துறையினர் சென்ற நிலையில், கன்று இறந்த நிலையில் மிதந்தது. பின் தீயணைப்புத் துறையினர் கயிறு மூலம் மீட்டு ஜெகதீஷிடம் ஒப்படைத்தனர்.
அதேபோல் பெத்தநாயக்கன்பாளையம், ஓலப்பாடி அருகே மேலக்காட்டை சேர்ந்த விவசாயி சங்கர், 43. இவருக்கு சொந்தமான பசுங்கன்று, நேற்று மதியம், 12:00 மணிக்கு அதே பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. வாழப்பாடி தீயணைப்பு துறையினர், கயிறு மூலம் கிணற்றில் இறங்கி, இறந்து கிடந்த பசுங்கன்றை மீட்டு சங்கரிடம் ஒப்படைத்தனர்.

