ADDED : மே 04, 2024 06:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் :சேலம், கொண்டலாம்பட்டி பெரியபுத்துாரை சேர்ந்தவர் சஞ்சய், 27, பெருமாள் கோவில் கரட்டை சேர்ந்தவர் சக்திவேல், 24. இருவருக்கும் முன்விரோதம் இருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆதரவாளர்களுடன் மோதியதால் கோஷ்டி மோதலாக மாறியது. இதில் சஞ்சய், சக்திவேல் ஆகியோருக்கு கத்திக்குத்து உள்ளிட்ட காயங்கள் ஏற்பட்டன. இருவரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, இருவரை பிடித்து விசாரிக்கின்றனர்.