/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருட்டு பைக்கில் நகை பறித்த 2 பேர்; உரிமையாளரிடம் விசாரித்த பின் வழக்கு

ADDED : மார் 12, 2025 08:45 AM
தலைவாசல்: தலைவாசல், கிழக்குராஜாபாளையத்தை சேர்ந்த, சந்திரசேகரன், 28. தனியார் நிறுவன ஊழியர். இவரது வீடு முன், நிறுத்தியிருந்த, 'யமஹா' பைக் கடந்த, 7ல் திருடுபோனது. வீரகனுார் போலீசார் விசாரித்தனர்.
இந்நிலையில் திருடுபோன பைக்கில் சென்ற இருவர், திருப்பூர் மாவட்டம் அவினாசி, குன்னத்துாரில், ஒரு பெண் அணிந்திருந்த நகையை பறித்துச்சென்றனர். அதில், ஒருவரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பைக் உரிமையாளர் சந்திரசேகரன் என தெரிந்தது. குன்னத்துார் போலீசார் நேற்று முன்தினம், வீரகனுார் ஸ்டேஷனுக்கு வந்து, பைக் உரிமையாளர் குறித்து விசாரித்தபோது, பைக் திருடுபோனது தெரிந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா என, விசாரித்தனர். தொடர்ந்து, பைக் திருட்டு வழக்கு பதிந்த பின், எப்.ஐ.ஆர்., நகலை பெற்றுச்சென்றனர்.