/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரு ஓட்டுச்சாவடிக்கு 2 ஓட்டுப்பதிவு இயந்திரம்
/
ஒரு ஓட்டுச்சாவடிக்கு 2 ஓட்டுப்பதிவு இயந்திரம்
ADDED : மார் 31, 2024 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் லோக்சபா தொகுதியில், 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், 15 சின்னம் மட்டும் பொருத்த முடியும். கடைசி பட்டன், 'நோட்டா'வுக்கு ஒதுக்கப்படுகிறது. அதன்படி, 25 பேர் போட்டியிடுவதால், சேலம் லோக்சபாவில் ஒவ்வொரு ஒட்டுச்சாவடிக்கும் தலா இரு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. லோக்சபாவுக்கு உட்பட்ட, 6 சட்டசபை தொகுதிகளில் உள்ள, 1,764 ஓட்டுச்சாவடிக்கு, ஏற்கனவே, 3,936 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு விட்டன. தற்போது அதே எண்ணிக்கையில், 3,936 ஓட்டுப்பதிவு இயந்திரம் கூடுதலாக அனுப்பப்படும் என, தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

