/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு 20 ஓவர் கிரிக்கெட்
/
பள்ளி, கல்லுாரிகளுக்கு 20 ஓவர் கிரிக்கெட்
ADDED : செப் 03, 2024 03:13 AM
சேலம்: சேலத்தில் வரும் 6ல், பள்ளி, கல்லுாரிகளுக்கு இடையேயான, 20 ஒவர் கிரிக்கெட் போட்டி நடக்கிறது.
இது குறித்து, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலர் பாபு-குமார் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி பெற்று, சேலம் மாவட்டத்தில் முதன் முறையாக சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் வகையில், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு இடை-யேயான, 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும், 6ல் சேலத்தில் நடைபெற உள்ளது.
போட்டியில் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்து மாவட்டம், மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் வகையில் செய்யப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்-டுள்ளது. போட்டி நடைபெறும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். போட்டி தொடர்பாக கமிட்டி சேர்மன் சந்தோசை, 98427 32093 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.