/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
200 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு
/
200 கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு
ADDED : பிப் 28, 2025 06:54 AM
நங்கவள்ளி: நங்கவள்ளி ஒன்றியம் வனவாசியில், சமூக நலத்துறை சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. 100 கர்ப்பிணியர் பங்கேற்றனர். தி.மு.க.,வின், சேலம் எம்.பி., செல்வகணபதி, கர்ப்பிணியருக்கு பல்வேறு வகை உணவுகளை பரிமாறினார். சமூக நலத்துறை அதிகாரிகள், நங்கவள்ளி ஒன்றிய செயலர் அர்த்தநாரீஸ்வரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தில், பழனியாபுரத்தில் கர்ப்பிணியருக்கு சமுதாய வளைகாப்பு விழா, நேற்று முன்தினம் நடந்தது. தி.மு.க.,வின், வாழப்பாடி தெற்கு ஒன்றிய செயலர் மாதேஸ்வரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்பட்ட கர்ப்பிணியருக்கு, அறுசுவை விருந்து பரிமாறி, வளையல் அணிவித்து பாரம்பரிய முறைப்படி விழா நடத்தப்பட்டது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், கர்ப்ப கால மருத்துவ ஆலோசனைகளை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின் கர்ப்பிணியருக்கு மஞ்சள், குங்குமம், எவர்சில்வர் தட்டுகள் பரிசாக வழங்கப்பட்டன. வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லாவண்யா உள்பட பலர் பங்கேற்றனர்.