/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உரக்கடையில் 21 நாள் விற்பனைக்கு தடை
/
உரக்கடையில் 21 நாள் விற்பனைக்கு தடை
ADDED : மார் 30, 2025 01:25 AM
உரக்கடையில் 21 நாள் விற்பனைக்கு தடை
சேலம்:சேலம் மாவட்டம் வளையமாதேவி விவசாயி தனபால், காட்டுகோட்டை தனியார் உரக்கடையில், மோசடியாக விற்பனை நடப்பதாக, நேற்று முன்தினம் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் குற்றம்சாட்டினார். அதன் எதிரொலியாக, உர ஆய்வாளர் ஜானகி, காட்டுக்கோட்டை பிரதான சாலையில் உள்ள உரக்கடையில் சோதனை மேற்கொண்டார். அதில் கையிருப்பு உரத்துக்கும், பராமரிப்பு பதிவேட்டில் இருந்த அளவுக்கும் முரண்பாடு இருந்தது. அத்துடன் விற்பனை முனையம் கருவி மூலம் ரசீது வழங்காமல், 'மேனுவல்' ரசீது வழங்கப்பட்டுள்ளது. விலை பட்டியலும் இல்லை. இருப்பு குறித்த உண்மை
விபரமும் பதியவில்லை.இதுகுறித்து உர கட்டுப்பாடு உதவி இயக்குனர் கவுதமன் கூறியதாவது: சம்பந்தப்பட்ட தனியார் உரக்கடையில் விற்பனை செய்ய, 21 நாள் தடை விதித்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார். இதுபோன்ற விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை மேற்கொண்டு உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும். முறைகேடு, புகார் தெரிவிக்க 94433 - 83304 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.