/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
25ல் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
/
25ல் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
ADDED : ஜன 24, 2025 01:33 AM
25ல் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
சேலம், : சேலம் எஸ்.பி., அலுவலக அறிக்கை:சேலம் மாவட்ட ஊர்காவல் படையில் ஆத்துார், சங்ககிரி, மேட்டூர் படை பிரிவில், 24 காலி பணியிடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப ஆட்கள் தேர்வு, வரும், 25ல் குமாரசாமிப்பட்டியில் உள்ள, சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்க உள்ளது. இதில், 10ம் வகுப்பு கல்வி தகுதி, 18 முதல், 45 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். ஆண்கள், 167 செ.மீ., பெண்கள், 157 செ.மீ., உயரம், நல்ல உடற்தகுதி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் எந்த குற்ற வழக்கிலும் ஈடுபட்டிருக்கக்கூடாது. தேர்வுக்கு வரும்போது, மார்பளவு புகைப்படம் இரண்டு, கல்வி தகுதி சான்றிதழ், ஆதார் கார்டு ஆகியவற்றின் அசல், நகல்களை கொண்டு வர வேண்டும். தேர்வு செய்யப்படுவோர், மாதத்தில், 5 நாள் மட்டும் பணிபுரிய அழைக்கப்படுவர். அந்த நாளில் தினமும், 560 ரூபாய் வழங்கப்படும்.

