/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ம.பி.,யில் இருந்து வந்த 2,500 டன் பயிறு, பருப்பு
/
ம.பி.,யில் இருந்து வந்த 2,500 டன் பயிறு, பருப்பு
ADDED : மே 17, 2024 08:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம், நாமக்கல், தர்மபுரியில் செயல்படும் பருப்பு ஆலைகளுக்கு தேவையான பயிறு வகைகள், மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
அதன்படி நேற்று மத்திய பிரதேசத்தில் இருந்து கொண்டைக்கடலை, பாசி பயிறு, தட்டப்பயிறு, நிலக்கடலை, துவரை ஆகியவையுடன், கடலை, துவரம், பாசி பருப்பு, உளுந்தம்பருப்புகள் என, 2,500 டன் வந்தது. அவை லாரிகள் மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள், பருப்பு மில்களின் குடோன்களுக்கு அனுப்பப்பட்டன.

