/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கரடி சித்தர் கோவிலில் 25ம் ஆண்டு குருபூஜை
/
கரடி சித்தர் கோவிலில் 25ம் ஆண்டு குருபூஜை
ADDED : மே 01, 2024 07:30 AM
வீரபாண்டி : சேலம், உத்தமசோழபுரம் அருகே கஞ்சமலை அடிவாரத்தில் உள்ள கரடி சித்தர் கோவிலில், 25ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று நடந்தது. மூலவர், உற்சவர் கரடிசித்தர் விக்ரகங்களுக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்பட, 16 வகை பொருட்களால் அபி ேஷகம் நடந்தது. மதியம் அவரை கொட்டை கலந்த இனிப்பு களி, பாரம்பரிய முறையில் விறகு அடுப்பில் சமைத்து உருண்டைகளாக பிடித்து கரடி சித்தருக்கு படைத்து பூஜை நடந்தது.
இரவு சப்பரத்தில் கரடி சித்தரை சர்வ அலங்காரத்தில் எழுந்தருளச்செய்து, முக்கிய வீதிகள் வழியே ஊர்வலம் நடந்தது. பின் ஊஞ்சல் உற்சவத்துடன் குருபூஜை விழா நிறைவடைந்தது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அவர்களுக்கு களி உருண்டைகள், அன்னதானம் வழங்கப்பட்டன.