ADDED : ஜன 30, 2025 01:08 AM
சேலம்:சேலம் மாவட்டத்தில், 26 பி.டி.ஓ.,க்களை இடமாற்றம் செய்து, கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். அதன்படி கெங்கவல்லி தாமரைச்செல்வி(கி.ஊ.,) தலைவாசல்; இடைப்பாடி ஆரோக்கியநாதன் கென்னடி(வ.ஊ), கொளத்துார்; ஏற்காடு வாசுதேவபிரபு(வ.ஊ.,) மேச்சேரி(கி.ஊ.,); கொங்கணாபுரம் பழனிசாமி(கி.ஊ.,) பெத்தநாயக்கன்பாளையம்(வ.ஊ.,); வீரபாண்டி தனபால்(கி.ஊ.,), ஓமலுாருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல் கொளத்துார் அண்ணாதுரை(வ.ஊ.,), கொங்கணாபுரம்; பெத்தநாயக்கன்பாளையம் மணிவாசகம்(வ.ஊ.,) இடைப்பாடி; நங்கவள்ளி பிரேமா(வ.ஊ.,), அதே ஒன்றிய கிராம ஊராட்சி; அங்கிருந்த ரவி, அதே ஒன்றிய வட்டார ஊராட்சி; மகுடஞ்சாவடி மலர்விழி(வ.ஊ.,) வீரபாண்டி; கொளத்துார் செந்தில்குமார்(கி.ஊ.,) கொங்கணாபுரம்; அங்கு பணியாற்றிய கவுரி, சேலத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம் வெங்கடேசன்(வ.ஊ.,), பெத்தநாயக்கன்பாளையம்(கி.ஊ.,); ஏற்காடு ஜெயா(கி.ஊ.,) சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை; அங்கு பணியாற்றிய அனுராதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம்; பெத்தநாயக்கன்பாளையம் துரைசாமி(கி.ஊ.,), உதவி இயக்குனர் தணிக்கை அலுவலகம்; அங்கு பணியாற்றிய அருள், ஏற்காடு(கி.ஊ.,); காடையாம்பட்டி பானுமதி(கி.ஊ.,) ஏற்காடு(வ.ஊ.,); சேலம் ஊரக வளர்ச்சி முகமை ரேவதி(வ.ஊ.,) மேச்சேரிக்கு மாற்றப்பட்டனர்.
மேலும் வீரபாண்டி சந்திரமலர்(வ.ஊ.,), மகுடஞ்சாவடி; மேச்சேரி முருகேசன்(வ.ஊ.,) வீரபாண்டி(கி.ஊ.,); மேச்சேரி ராமநாதன்(கி.ஊ.,) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை; தலைவாசல் இளங்கோ(கி.ஊ.,), காடையாம்பட்டி; ஓமலுார் நல்லதம்பி(கி.ஊ.,) கொளத்துார்; சேலம் ஊராட்சி உதவி இயக்குனர் அலுவலகம் ரங்கராஜன்(வ.ஊ.,) கெங்கவல்லி; அங்கு பணியாற்றிய சந்திரசேகர், அதே ஒன்றிய கிராம ஊராட்சிக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

