/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.26.60 லட்சம் பறிமுதல்
/
உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.26.60 லட்சம் பறிமுதல்
ADDED : ஏப் 09, 2024 02:08 AM
சங்ககிரி:சங்ககிரி தாலுகா, இடங்கணசாலை பேரூராட்சி அலுவலகம் அருகில், சங்ககிரி தொகுதி நிலை கண்காணிப்பு குழுவை சேர்ந்த, கொங்கணாபுரம் பேரூராட்சி இளநிலை செயற்பொறியாளர் அன்பழகன், எஸ்.எஸ்.ஐ., ரேவதி ஆகியோர் கொண்ட தேர்தல் பறக்கும் படையினர் நேற்று மாலை 5:15 மணிக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, காடையாம்பட்டி அருகே உள்ள காருவள்ளியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், காரில் தனியார் வங்கியில் இருந்து ஏ.டி.எம்., மையங்களுக்கு பணத்தை நிரப்புவதற்கு, 26 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாயை கொண்டு சென்றுள்ளார். பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், சங்ககிரி சட்டசபை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாயகியிடம் பணத்தை ஒப்படைத்தனர்.

