/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
28 கைதிகள் சேலத்துக்கு மாற்றம்ஆத்துார் மாவட்ட சிறை மூடல்?
/
28 கைதிகள் சேலத்துக்கு மாற்றம்ஆத்துார் மாவட்ட சிறை மூடல்?
28 கைதிகள் சேலத்துக்கு மாற்றம்ஆத்துார் மாவட்ட சிறை மூடல்?
28 கைதிகள் சேலத்துக்கு மாற்றம்ஆத்துார் மாவட்ட சிறை மூடல்?
ADDED : மார் 01, 2025 01:44 AM
28 கைதிகள் சேலத்துக்கு மாற்றம்ஆத்துார் மாவட்ட சிறை மூடல்?
ஆத்துார்:ஆத்துாரில் உள்ள மாவட்ட சிறையில் இருந்த, 28 கைதிகள் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர். இதனால் மாவட்ட சிறை மூடப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்துார் தாலுகா அலுவலக வளாகத்தில், 1901ல் கிளைச்சிறை தொடங்கப்பட்டது. 1985ல், இச்சிறை வருவாய்த்துறை வசம் இருந்தது. 1986 முதல், மாநில சிறைத்துறை கட்டுப்பாட்டுக்கு வந்தது. அங்கு, 24 பேரை அடைத்து வைக்கும் வசதி இருந்தது. அதனால் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோர், ஆத்துாரில் இருந்து, 60 கி.மீ.,ல் உள்ள சேலம் மத்திய சிறைக்கு கொண்டு செல்ல வேண்டியிருந்தது. 2007 - -08ல், மத்திய, மாநில அரசுகள் நிதியுதவியுடன், ஆத்துார் கிளைச்சிறை, மாவட்ட சிறையாக தரம் உயர்த்தப்பட்டது. 1.32 கோடி ரூபாயில், 5 பிளாக் கொண்ட மாடி கட்டடமாக கட்டப்பட்டது. இதனால், 200 பேரை அடைத்து வைக்க முடியும். நேற்று, 28 கைதிகள் இருந்தனர். அவர்களை, மாலை, 6:00 மணிக்கு, போலீஸ் பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறைக்கு, பஸ்சில் அழைத்துச்சென்றனர். தொடர்ந்து அங்கு பணிபுரியும், சிறை அலுவலர், பணியாளர் என, 37 பேர், இன்று முதல், சேலம் மத்திய சிறைக்கு வரும்படி கூறியுள்ளனர்.
இதுகுறித்து சிறைத்துறை அலுவலர்கள் கூறுகையில், 'சிறை மூடப்படுவது குறித்து தகவல் இல்லை. சிறையில் ஒரு போலீசார் மட்டும், மறு உத்தரவு வரும் வரை பணியில் இருப்பார். கண்காணிப்பு கேமராவும் செயல்பாட்டில் இருக்கும்' என்றனர். மேலும் சிறை செயல்படாத நிலையில் வேறு இடத்துக்கு மாற்றப்படலாம் என, போலீசார் புலம்பினர்.