ADDED : மார் 12, 2025 08:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாழப்பாடி: வாழப்பாடியில், வேளாண் விற்பனை, வணிகத்துறை மூலம், சேலம் - உளுந்துார்பேட்டை நெடுஞ்சாலையோரம், 50 லட்சம் ரூபாய் செலவில் உழவர் சந்தை அமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச், 11ல் முதல்வர் ஸ்டாலின், வீடியோ கான்பரன்ஸ் மூலம் திறந்து வைத்தார்.
அதன், 2ம் ஆண்டு தொடக்க விழா நேற்று காலை கொண்டாடப்பட்டது. 'அட்மா' குழு தலைவர் சக்கரவர்த்தி, தி.மு.க.,வை சேர்ந்த வாழப்பாடி டவுன் பஞ்சாயத்து தலைவி கவிதா உள்பட பலர் பங்கேற்றனர். இதில் நுகர்வோர், விவசாயிகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.