/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காட்டுப்பன்றி வேட்டைக்கு முயற்சி 4 பேருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
/
காட்டுப்பன்றி வேட்டைக்கு முயற்சி 4 பேருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
காட்டுப்பன்றி வேட்டைக்கு முயற்சி 4 பேருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
காட்டுப்பன்றி வேட்டைக்கு முயற்சி 4 பேருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
ADDED : ஆக 30, 2024 04:42 AM
வாழப்பாடி: வாழப்பாடி வனச்சரக பாதுகாப்பு படை குழுவினர், விளாம்பட்டி காப்புக்காட்டில் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டு பன்றியை பிடிக்க வலை வைத்து, குத்தி எனும் வேல் கம்புடன், 4 பேர் பதுங்கி இருந்தனர்.
அவர்களை பிடித்து வனத்துறையினர் விசாரித்ததில், சேலம், கொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்துாரை சேர்ந்த மணிகண்டன், 31, சதாசிவம், 28, உத்தமசோழபுரம் மணிவேல், 29, மற்றும் 17 வயது சிறுவன் என தெரிந்தது. அவர்களிடமிருந்து மூங்கில், வேல் கம்பு, வலை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், விலங்கை வேட்-டையாட முயன்ற குற்றத்துக்கு தலா, 75,000 வீதம், 4 பேருக்கும், 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.இதுகுறித்து வனச்சரக அதிகாரிகள் கூறுகையில், 'நெய்க்காரப்-பட்டி முனியப்பன் கோவிலில் காட்டு பன்றியை பலியிட்டு சிலர் விழா நடத்துகின்றனர். இதற்கு வேட்டையாட, 4 பேரும் முயன்-றதால் அபராதம் விதித்து எச்சரித்தோம்' என்றனர்.