/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாநகராட்சி ஊழியர் வீட்டில் 4 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு
/
மாநகராட்சி ஊழியர் வீட்டில் 4 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு
மாநகராட்சி ஊழியர் வீட்டில் 4 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு
மாநகராட்சி ஊழியர் வீட்டில் 4 பவுன், ரூ.1.25 லட்சம் திருட்டு
ADDED : ஆக 28, 2024 08:24 AM
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம், வ.உ.சி., நகரை சேர்ந்தவர் துரைராஜ், 39. சேலம் மாநகராட்சி, 41வது வார்டு துாய்மை பணி மேற்பார்வையாளராக உள்ளார். இவர் கடந்த, 24 காலை, 11:00 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு வழக்கம்போல் ஜன்னலில் சாவியை வைத்துவிட்டு அருகே உள்ள கடைக்குச்சென்றார். சிறிது நேரத்தில் துரைராஜ் திரும்பி வந்து வீட்டை திறந்து உள்ளே சென்றார். அப்போது பீரோ திறந்திருந்தது. சந்தேகமடைந்த பார்த்தபோது, 1.25 லட்சம் ரூபாய், 4 பவுன் நகை திருடுபோனது தெரிந்தது. இதுகுறித்து துரைராஜ், நேற்று முன்தினம் அளித்த புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'துரைராஜ், ஜன்னல் பகுதியில் சாவி வைப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். தொடர்ந்து விசாரிக்கிறோம்' என்றனர்.