ADDED : ஏப் 18, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார் அருகே கொத்தாம்பாடியில் வீட்டில் மதுபாட்டில் பதுக்கி வைத்துள்ளதாக, சேலம் எஸ்.பி., அருண்கபிலனுக்கு புகார் சென்றது.
அவரது உத்தரவுப்படி ஆத்துார் மதுவிலக்கு போலீசார், கொத்தாம்பாடியை சேர்ந்த ராயர் வீட்டில் ஆய்வு செய்தனர். அப்போது வீட்டில் இருந்த, 403 மதுபாட்டில்களை, பறிமுதல் செய்து, தலைமறைவான ராயரை தேடி வருகின்றனர்.

