/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காவிரியாற்றில் 443 சிலைகள் கரைப்பு
/
காவிரியாற்றில் 443 சிலைகள் கரைப்பு
ADDED : செப் 08, 2024 07:27 AM
இடைப்பாடி: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சேலம் மாவட்டத்தில் பல்-வேறு இடங்களில் சிலைகள் வைத்து, பல்வேறு அமைப்பினர், விழா குழுவினர் வழிபட்டனர்.தொடர்ந்து முதல் நாளான நேற்றே, மாலை, 6:00 மணி வரை கல்-வடங்கம் காவிரியாற்றில், 125 சிலைகளும், பூலாம்பட்டியில் உள்ள பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனுார் ஆகிய இடங்களில் உள்ள காவிரியாற்றில், 137 சிலைகளை, பக்தர்கள் கொண்டு வந்து கரைத்தனர்.
பூலாம்பட்டியில் துடுப்பு படகு மூலம் ஆற்றின் நடுப்பகுதிக்கு கொண்டு சென்று சிலைகளை கரைக்க, போலீசார் ஏற்பாடு செய்தி-ருந்தனர். மேட்டூர் காவிரி பாலம், எம்.ஜி.ஆர்., பாலம் அடிவார படித்துறை, கொளத்துார் அடுத்த சென்றாய பெருமாள் கோவில் அருகே
மேட்டூர் அணை நீர்பிடிப்பு பகுதி; கருமலைக்கூடல் அடுத்த திப்-பம்பட்டி; மேச்சேரி அடுத்த கூனாண்டியூர் அணை நீர்பரப்பு
பகு-திகளில் சிலை கரைக்க வருவாய்த்துறையினர் அனுமதி அளித்-தனர். அதன்படி நேற்று மேட்டூரில், 63, கொளத்துாரில்,
1, திப்பம்-பட்டியில், 43, எம்.ஜி.ஆர்., பாலம் அடிவாரம் காவிரியில், 20, கூனாண்டியூரில், 54 என, 181 சிலைகளை பக்தர்கள்
கரைத்தனர். இதன் மூலம் காவிரி ஆற்றில், ௪௪௩ சிலைகள் கரைக்கப்பட்டன.