ADDED : மார் 02, 2025 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
5ல் எலக்ட்ரானிக்ஸ்பொருட்கள் ஏலம்
சேலம், :சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக அறிக்கை:சேலம் மாநகர போலீசின் தொழில்நுட்ப பிரிவில் பயன்படுத்தப்பட்ட எலக்ட்ரிக், எலக்ட்ரானிக்ஸ், அதன் சார்பு உபகரணங்கள் பழுதாகியுள்ளன. அதை கழிவு நீக்கம் செய்ய, வரும், 5ல் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் ஏலம் நடக்க உள்ளது. மார்ச், 4 காலை, 10:00 முதல் மதியம், 3:00 மணி வரை, மக்கள் பார்வைக்கு பொருட்கள் வைக்கப்படும்.
அரசு விதிப்படி, தகுதி சான்று உள்ள நிறுவனங்கள் மட்டும் ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். விருப்பம் உள்ளவர்கள், ஏல நாளில், 500 ரூபாய் முன்வைப்பு தொகை செலுத்தி பங்கேற்கலாம். பின் ஏலத்தொகை முழுதையும், ஜி.எஸ்.டி.,யுடன் சேர்த்து செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.