/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அழுக்கு அகற்றிய பின் 5 கிலோ சுத்த தங்கம்
/
அழுக்கு அகற்றிய பின் 5 கிலோ சுத்த தங்கம்
ADDED : மே 31, 2024 03:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கோட்டை மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று, 2ம் நாளாக அப்பணி நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி, ஹிந்து சமய அறநிலைத்துயை அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அறநிலைத்துயை அதிகாரிகள் கூறுகையில், ''கோவிலுக்கு பக்தர்கள், 5 கிலோ, 150 கிராம் தங்க நகைகளை வழங்கி இருந்தனர். அதில் தேவையற்ற கற்கள், அரக்கு, அழுக்கு உள்ளிட்டவை நீக்கி, 5 கிலோ, 37 கிராம் சுத்த தங்கம் இருப்பது தெரிந்தது. நகைகள், அரசு ஆணைக்கு பின் உருக்கப்பட்டு வங்கியில் ஒப்படைக்கப்படும்,'' என்றனர்.