/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.60.40 லட்சத்துக்கு திருப்பணி தொடக்கம்
/
ரூ.60.40 லட்சத்துக்கு திருப்பணி தொடக்கம்
ADDED : மார் 13, 2025 02:12 AM
ரூ.60.40 லட்சத்துக்கு திருப்பணி தொடக்கம்
சேலம்:சேலம், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு முன் பாலாலயம் செய்து கும்பாபிேஷக திருப்பணி நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று, கோவில் உள் சுற்றுப்பிரகாரம் முழுதும், 42.80 லட்சம் ரூபாய் மதிப்பில் கருங்கல் தரைத்தளம்; 9.60 லட்சம் ரூபாயில் அன்னதான கூடம் மராமத்து பணி ஆகியவை உபயதாரர்களாலும், அறநிலையத்துறை சார்பில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் கோவில் அலுவலகம் கட்டும் பணி என, 67.40 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிக்கு நேற்று பூமி பூஜை போடப்பட்டு பணி தொடங்கப்பட்டது.
இதில் அறங்காவலர் குழு தலைவர் சாந்தியின் மகள் மலர்விழி, செயல் அலுவலர் சோழமாதேவி, வீரபாண்டி, 'அட்மா' குழு தலைவர் வெண்ணிலா உள்ளிட்ட அறங்காவலர்கள், உபயதாரர்கள் பங்கேற்றனர்.