/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
696 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
/
696 கிலோ புகையிலை பறிமுதல்: 2 பேர் கைது
ADDED : செப் 05, 2024 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே, தீவட்டிப்பட்டி போலீசார் நேற்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த, கர்நாடகா பதிவெண் கொண்ட மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில், 6 லட்சம் ரூபாய் மதிப்பில், 696 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. லாரியில் இருந்த இருவரிடம் விசாரித்தபோது கர்நாடகாவில் இருந்து சேலம் கொண்டுவரப்பட்டதும், பெங்களூருவை சேர்ந்த மகேந்திரசிங், 22, அசோக்ரானா, 25, என்பதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், லாரியை பறிமுதல் செய்தனர்.