ADDED : ஏப் 10, 2025 02:17 AM
அ நிறம் | அளவு
அரசு பள்ளிகளில்7,487 பேர் சேர்ப்பு
சேலம்:சேலம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில், 2025 - 26ம் ஆண்டுக்கு, கடந்த மார்ச், 1ல் தொடங்கி, எல்.கே.ஜி., முதல், 8ம் வகுப்பு வரை, மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இது-குறித்து கல்வி அலுவலர்கள் கூறியதாவது:மாவட்டத்தில் சேலம், தாரமங்கலம் என, இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இங்கு, 1,423 தொடக்கப்பள்ளி, 425 நடுநிலைப்பள்ளி உள்ளன. கடந்த மாதம், 1ல் இருந்து தற்போது வரை, எல்.கே.ஜி., முதல், 8ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வகுப்புகளில், 7,487 பேர் சேர்ந்துள்ளனர். எல்.கே.ஜி.,யில், 353, யு.கே.ஜி.,யில், 22 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
