ADDED : ஏப் 11, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயிலில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம்:தன்பாத் - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை காட்பாடியில் வந்தபோது, ரயில்வே போலீசார் ஏறி சோதனை செய்தனர். முன்பதிவற்ற பெட்டியில் கழிப்பறை அருகே இருந்த ஒரு பையை எடுத்து பார்த்ததில், 8 கிலோ கஞ்சா இருந்தது. பையுடன் பறிமுதல் செய்தனர்.
கடத்தி வந்தவர், போலீசாரை பார்த்ததும் பையை போட்டுவிட்டு சென்றது தெரிந்தது. கஞ்சாவை சேலம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.