/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
800 போதை மாத்திரை, 50 ஊசி பறிமுதல்: 13 பேர் சிக்கினர்
/
800 போதை மாத்திரை, 50 ஊசி பறிமுதல்: 13 பேர் சிக்கினர்
800 போதை மாத்திரை, 50 ஊசி பறிமுதல்: 13 பேர் சிக்கினர்
800 போதை மாத்திரை, 50 ஊசி பறிமுதல்: 13 பேர் சிக்கினர்
ADDED : பிப் 22, 2025 02:42 AM
சேலம்:சேலத்தில் ஜன., 14ல் போதை மாத்திரை விற்ற, 9 பேரை கைது செய்த போலீசார், 7900 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். இதையடுத்து துணை கமிஷனர் வேல்முருகன் தலைமையில் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரித்தனர். இதில், கிச்சிப்பாளையம், கஸ்துரிபாய் தெரு, குறிஞ்சி நகர் ஹவுசிங் போர்டு காலனியில், போதை மாத்திரை விற்பதாக தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் அங்கு சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, 'டேபென்டடோல்' எனும் போதை மாத்திரை, ஊசி விற்பனையில் ஈடுபட்ட, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த சண்முகம், 26, சீனிவாசன், 25, முனியப்பன், 25, விக்ரம், 24, 19, மற்றும் 18 வயது சிறுவன் உட்பட, 13 பேரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 800 மாத்திரைகள், 50 ஊசிகள், 2 பைக், 11,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய, 2 பேரை, போலீசார் தேடுகின்றனர்.