/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.10 லட்சத்துக் ரூ.10 லட்சத்துக்கு மண்ணுளி பாம்பைவிற்க முயன்ற 9 பேர் சுற்றிவளைப்பு

ADDED : பிப் 15, 2025 01:35 AM
ரூ.10 லட்சத்துக்கு மண்ணுளி பாம்பைவிற்க முயன்ற 9 பேர் சுற்றிவளைப்பு
சேலம்சேலம் மாவட்டத்தில் மண்ணுளி பாம்பை கள்ளச்சந்தையில் விற்க ஒரு கும்பல் முயற்சிப்பதாக, வன அலுவலர் கஷ்யாப் சசாங்க் ரவிக்கு தகவல் கிடைத்தது. இதனால் நேற்று முன்தினம், சேர்வராயன் தெற்கு வனச்சரக அலுவலர் துரை
முருகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள், அரியானுாரில் ஆய்வு செய்தபோது, ஒரு கும்பல் புதர் மறைவில் இருந்ததை பார்த்து, சுற்றி வளைத்து விசாரித்தனர்.
அதில் மின்னாம்பள்ளியை சேர்ந்த ராகதேவன், 26, அம்மாபேட்டை பிரபு- 25, பெருமாள் கோவில் தெரு சுரேஷ், 38, இடைப்பாடி ஜீவானந்தம், 35, ராஜமாணிக்கம், 63, கிச்சிப்பாளையம் செல்வராஜ், 60, பச்சப்பட்டி மனாப், 24, துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கிருஷ்ணமூர்த்தி, 40, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சிவகுமார், 23, என்பதும், வாட்ஸாப் குழு மூலம் தொடர்பு ஏற்படுத்தி, கள்ளச்சந்தையில் மண்ணுளி பாம்பை, 10 லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றது தெரிந்தது. இதனால், 9 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் உயிருடன் இருந்த மண்ணுளி பாம்பு, ஒரு ஆட்டோ, ஸ்கூட்டி, ஹீரோ ஹோண்டா பைக் பறிமுதல் செய்யப்பட்டதாக, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.