ADDED : ஜூன் 11, 2024 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : தமிழகத்தில், 1999 மே, 24ல் போலீஸ் துறையில், 3,000 இரண்டாம் நிலை போலீசார் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்கள் தற்போது ஏட்டாக பணிபுரியும் நிலையில், 25 ஆண்டுகள் பணிநிறைவு செய்துள்ளனர். இதனால் சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாநகர போலீசில், 51 பேர், மாவட்ட போலீசில், 42 பேர், பதவி உயர்வு பெற்றுள்ளனர்.