/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாவட்டத்தில் 94.60 சதவீத தேர்ச்சி
/
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாவட்டத்தில் 94.60 சதவீத தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாவட்டத்தில் 94.60 சதவீத தேர்ச்சி
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாவட்டத்தில் 94.60 சதவீத தேர்ச்சி
ADDED : மே 07, 2024 10:18 AM
சேலம்: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. அதில் சேலம் மாவட்டத்தில் இத்தேர்வை, 321 அரசு, தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து, 16,052 மாணவர், 18,856 மாணவியர் என, 34,908 பேர் எழுதினர். இதில், 14,824 மாணவர், 18,198 மாணவியர் என, 33,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது, 94.60 சதவீதம்.
கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில், 94.22 சதவீத தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், நடப்பாண்டு அதைவிட, 0.38 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவர்களில், 92.35 சதவீதம், மாணவியரில், 96.51 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள, 159 அரசு பள்ளிகளில், 18,832 மாணவ, மாணவியர் பங்கேற்ற நிலையில், 17,320 பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி, 90.88 சதவீதமாக இருந்த நிலையில், நடப்பாண்டு அதன் சதவீதம், 91.97 ஆக அதிகரித்துள்ளது. சிறந்த தேர்ச்சி காட்டிய, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர் உள்ளிட்ட, கல்வி அலுவலர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
2,255 'சென்டம்'
சேலம் மாவட்டத்தில், 34,908 பேர் தேர்வெழுதி, 33,022 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் பாடவாரியாக, 'சென்டம்' பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை விபரம்: தமிழ், 5, கணிதம், 125, இயற்பியல், 29, வேதியியல், 17, உயிரியல், 11, தாவரவியல், 4, விலங்கியல், 23, வணிகவியல், 125, பொருளியல், 93, கணக்குப்பதிவியல், 40, வரலாறு, 3, கணினி அறிவியல், 311, தொழிற்கல்வி பாடங்கள் - 1,469.