ADDED : ஜூன் 10, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார்: காடையாம்பட்டி தாலுகா, தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவிலுக்குள் ஒரு பிரிவினர் வழிபட, மற்ற பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த மே, 2ல் கலவரம் ஏற்பட்டதில், இரு தரப்பை சேர்ந்த, 30 பேரை தீவட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர். அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, கலவரம் ஏற்பட்ட பகுதியை சுற்றி போலீஸ் சார்பில், 40 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஐந்து இடங்களில் போலீசார், தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் கூறுகையில், ''தீவட்டிப்பட்டி முழுதும் கேமரா பொருத்தி, ஸ்டேஷனில் உள்ள 'மானிட்டர்' மூலம் கண்காணிக்கப்படுகிறது. தீவட்டிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகே விரைவில், 'போலீஸ் அவுட் போஸ்ட்' அமைக்கப்படும்,'' என்றார்.