/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போலீஸ் பாதுகாப்புடன் துார்வாரப்பட்ட கால்வாய்
/
போலீஸ் பாதுகாப்புடன் துார்வாரப்பட்ட கால்வாய்
ADDED : ஆக 23, 2024 01:37 AM
தாரமங்கலம், ஆக. 23-
மேட்டூர் காவிரி உபரிநீர் மூலம், 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தில், தாரமங்கலம் பெரிய ஏரி உள்ளது. அந்த ஏரி நிரம்பினால் வெளியேறும் தண்ணீர், குருக்குப்பட்டி ஏரிக்கு செல்லும். அதற்கு வேடப்பட்டி சாலையில் சரஸ்வதி நகரில், கடந்த, 16ல் கால்வாய் துார்வாரும் பணியை பொதுப்பணி, வருவாய்த்துறையினர் மேற்கொண்டனர். ஆனால் கால்வாயை ஆக்கிரமித்திருந்த மக்கள், எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பணி நிறுத்தப்பட்டு தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டது.
இந்நிலையில் தாரமங்கலம் பெரிய ஏரி விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளதால், சரஸ்வதி நகரில் கால்வாய் துார்வார, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜாராம், ஓமலுார் சமூக நலத்துறை தாசில்தார் செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார், நேற்று அங்கு வந்தனர். அப்போது மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் 200 மீட்டருக்கு கால்வாய் துார்வாரப்பட்டது. மேலும் குடியிருப்பு பகுதிகள் உள்ள இடத்தில், 60 அடிக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர துார்வாரும் பணிக்கு இடையூறாக இருந்த மின்கம்பம், அதன் அருகே இடமாற்றம் செய்யப்பட்டது.