/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கொங்கணாபுரம் அருகே பருத்தி மில்லில் தீ விபத்து
/
கொங்கணாபுரம் அருகே பருத்தி மில்லில் தீ விபத்து
ADDED : ஆக 17, 2024 04:45 AM
இடைப்பாடி: சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே எருமைபட்டியை சேர்ந்தவர் மோகன்ராஜ், 38. இவர், அதே பகுதியில் அனுசுயா காட்டன் ஜின்னிங் பேக்டரி என்ற, பருத்தி பஞ்சு அரவை மிஷினை வைத்துள்ளார். இங்கு பருத்தி பஞ்சு, கொட்டையை தனித்தனியே பிரித்தெடுக்கும் வேலை நடந்து வருகிறது. நேற்று மதியம், 2:30 மணிக்கு பேக்டரியில் உள்ள பஞ்சில் தீ பிடித்துள்-ளது. தீ வேகமாக பரவியதால், அப்பகுதி மக்களும், இடைப்பாடி தீயணைப்பு துறை வீரர்களும் தீயை அணைத்தனர்.
கொங்கணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், ஜின்னிங் பேக்டரி மிஷினில் ஏற்பட்ட அதிக வெப்பத்தால், தீ பரவி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பருத்தி பஞ்சு தீயில் கருகி சேதமடைந்துள்ளது.

