/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மர வேலை நிறுவனத்தில் தீ ரூ.20 லட்சத்துக்கு சேதம்
/
மர வேலை நிறுவனத்தில் தீ ரூ.20 லட்சத்துக்கு சேதம்
ADDED : மே 17, 2024 08:48 PM
மேட்டூர்:சேலம் மாவட்டம், மேட்டூர், நாட்டாமங்கலத்தில் பவானி நெடுஞ்சாலையோரம், 'ஓம் முருகா' மர வேலை, பிளைவுட் கதவுகள் தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அதில், 30 லட்சம் ரூபாய்க்கு மேல், தேக்கு மரங்கள், தயாரிப்பு தளவாடங்கள் இருந்தன. நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு அந்த நிறுவன உட்பகுதியில் தீப்பற்றி எரிந்தது.
இதுகுறித்து, அதன் உரிமையாளர் ஜோதிமணி, 35, தகவல்படி, இரவு, 11:00 மணிக்கு மேட்டூர் தீயணைப்பு மீட்பு குழுவினர் தீயை அணைத்தனர். எனினும், 20 லட்சம் ரூபாய்க்கு மேல், தயாரிப்பு தளவாடங்கள், பிளைவுட், தேக்கு மரங்கள் கருகி சேதமாகின. இரும்பு தளவாடங்கள், பிளைவுட்களுக்கு காப்பீடு செய்யாததால் இழப்பீடு கிடைக்க வழியில்லை என, ஜோதிமணி தெரிவித்தார். மேட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

