/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஒரே நேரத்தில் 250 பேர் சிலம்பம் சுற்றி சாதனை
/
ஒரே நேரத்தில் 250 பேர் சிலம்பம் சுற்றி சாதனை
ADDED : மே 20, 2024 02:06 AM
சேலம்: சேலம், கன்னங்குறிச்சியில் உள்ள வீரச்சிலம்பொலி கலைக்கூடம் சார்பில் மாணவ, மாணவியருக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்தவர்களுக்கு, உலக சாதனை நிகழ்வு நேற்று நடத்தப்பட்டது. சிலம்ப தலைமை ஆசான் முருகேசன் தலைமை வகித்தார். மாநகர் போலீஸ் உதவி கமிஷனர் பாபு, சாதனை நிகழ்வை தொடங்கி வைத்தார். சிலம்ப மாநில நடுவராக முருகேசன் செயல்பட்டார்.
இதில் நோபல் வேல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பின் சார்பில், 250 பேர், 120 நிமிடங்களில், 120 சுற்றுகள் சிலம்பம் சுற்றி சாதனையை அரங்கேற்றினர். காலை, 7:15க்கு தொடங்கி, 8:35 மணிக்கு முடிந்தது.
முருகேசன் கூறுகையில், ''35 ஆண்டாக ஏழை, எளிய மாணவ, மாணவியருக்கு இலவசமாக சிலம்ப பயிற்சி அளித்து வருகிறோம். அதில் தேர்ச்சி பெற்றவர்களை, அடுத்தகட்ட முன்னேற்றத்துக்கு அழைத்து செல்ல சாதனை நிகழ்வு நடத்தப்பட்டது,'' என்றார்.

