sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆடி அமாவாசை: முன்னோர்க்கு தர்ப்பணம்

/

ஆடி அமாவாசை: முன்னோர்க்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசை: முன்னோர்க்கு தர்ப்பணம்

ஆடி அமாவாசை: முன்னோர்க்கு தர்ப்பணம்


ADDED : ஆக 05, 2024 06:47 AM

Google News

ADDED : ஆக 05, 2024 06:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: ஆடி அமாவாசையையொட்டி, மேட்டூர் அணை கரையோரம், கொளத்துார் நீரேற்று நிலையம் அருகே உள்ள படித்துறை, எம்.ஜி.ஆர்., பாலம் அருகே உள்ள படித்துறையில் நேற்று, முன்-னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க, வருவாய்த்துறை அனுமதி அளித்திருந்தது. அங்கு அதிகாலை முதலே, சேலம் உள்பட பல்-வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மக்கள், காவிரியாற்றில் நீராடினர். தொடர்ந்து அருகே உள்ள படித்துறையில் அமர்ந்து புரோகிதர்கள் வேத மந்திரம் முழங்க, தங்களின் இறந்த முன்-னோர்கள் ஆத்மா சாந்தியடைய தர்ப்பணம் கொடுத்தனர்.

அதேபோல் கிழக்கு கரை வாய்க்கால் கரையோரங்களான பில்லுக்-குறிச்சி, குள்ளம்பட்டி, ஓணாம்பாறை ஆகிய இடங்களில் ஏராள-மானோர், முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்தனர்.

சுகவனேஸ்வரர் கோவில்

சேலம் சுகவனேஸ்வரர் கோவி லில், தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமானோர், முன்னோர்களுக்கு பிடித்த உணவுப்பொருட்கள், வாழைப்

பழங்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜை செய்து, முன்னோர்-களை நினைத்து வழிபட்டனர். முன்னோர்களின் பெயரை சொல்லி, புரோகிதர் மந்திரம் ஓத, திதி கொடுத்தனர். எள் உருண்டை, பச்சரிசி சாதம் உள்ளிட்டவை படைத்து வழிபட்-டனர். அதேபோல் மணல்மேடு பகுதியிலும் ஏராளமானோர், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.






      Dinamalar
      Follow us